Asianet News TamilAsianet News Tamil

#RRvsDC முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே வெற்றியை உறுதி செய்துவிட்ட ராயல்ஸ்..! சொற்ப ரன்னுக்கு சுருண்ட கேபிடள்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 147 ரன்கள் மட்டுமே அடித்தது. 
 

delhi capitals set easy target to rajasthan royals in ipl 2021
Author
Mumbai, First Published Apr 15, 2021, 9:38 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிடள்ஸ் அணியும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன்  சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷாவை 2வது ஓவரிலேயே வெறும் 2ரன்னில் வீழ்த்தினார் உனாத்கத். தனது அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஷிகர் தவானை 9 ரன்னிலும், பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் அஜிங்க்யா ரஹானேவை 8 ரன்னிலும் வீழ்த்தினார் உனாத்கத். 

பவர்ப்ளேயில், பிரித்வி ஷா, தவான், ரஹானே ஆகிய மூவரையுமே ஒற்றை இலக்கத்தில் ஜெய்தேவ் உனாத்கத் வெளியேற்ற, பவர்ப்ளேயில் வெறும் 36 ரன்களை மட்டுமே அடித்து 3 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.

பவர்ப்ளே முடிந்த அடுத்த 7வது ஓவரை முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸை டக் அவுட்டாக்கி அனுப்ப, 37 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது டெல்லி கேபிடள்ஸ் அணி.

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டுடன் ஜோடி சேர்ந்த லலித் யாதவ், சிறப்பாக ஆடினார். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், 51 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆக, 5வது விக்கெட்டுக்கு ரிஷப்பும் லலித் யாதவும் இணைந்து 51 ரன்களை சேர்த்தனர்.

அதன்பின்னர் லலித் யாதவும் 20 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசியில் கிறிஸ் வோக்ஸ், டாம் கரன் ஆகியோர் இணைந்து சிறிய பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 147 ரன்கள் மட்டுமே அடித்தது டெல்லி அணி.

மும்பை வான்கடேவில் 148 ரன்கள் என்பது மிக எளிதான இலக்கு என்பதால், ராஜஸ்தான் அணி எளிதாக அடித்துவிடும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios