ஐபிஎல் 14வது சீசனில் ஞாயிற்றுக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப்புக்கு எதிரான இந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கும். ரன்களை வாரி வழங்கிவரும் இங்கிலாந்தை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலரான டாம் கரன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலரான அன்ரிக் நோர்க்யா சேர்க்கப்படுவார்.

நோர்க்யாவிற்கு கொரோனா பாசிட்டிவ் என்ற தகவல் வந்த நிலையில், அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட 3 பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என்று வந்ததால், அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானதையடுத்து, இன்றைய போட்டியில் அவர் ஆட அதிக வாய்ப்புள்ளது. ரபாடா - நோர்க்யா ஜோடி கடந்த சீசனில் அபாரமாக பந்துவீசி டெல்லிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நிலையில், இந்த சீசனில் இந்த போட்டியில் தான் முதல் முறையாக இருவரும் இணைந்து ஆடவுள்ளனர்.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, ஆவேஷ் கான்.