சிஎஸ்கேயின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஆப்பு வச்ச டெல்லி கேபிடல்ஸ் – ரிஷப் பண்டிற்கு கிடைத்த முதல் வெற்றி!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 13ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Delhi Capitals Beat Chennai Super Kings by 20 Runs Difference in 13th IPL 2024 Match at Visakhapatnam rsk

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது.

இதில், டேவிட் வார்னர் அதிகபட்சமாக 52 ரன்களும், ரிஷப் பண்ட் 51 ரன்களும் பிரித்வி ஷா 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் 192 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில், தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். ஜெய்க்வாட் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திரா 2 ரன்னில் நடையை கட்டினார். இவர்களைத் தொடர்ந்து அஜின்க்யா ரஹானே மற்றும் டேரில் மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். மிட்செல் 34 ரன்களில் அக்‌ஷர் படேல் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரஹானே 45 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் நடையை கட்டினார். அடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த ஷிவம் துபே 18 ரன்களில் அவுட்டானார். சமீர் ரிஸ்வி கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். தோனி வந்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார்.

ஆனால், 2ஆவது பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆஃப் சைடு பாய்ண்ட் திசையில் நின்றிருந்த கலீல் அகமது கோட்டைவிட்டார். சிஸ்கே 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 19ஆவது ஓவரில் சிஎஸ்கே 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் தோனி களத்தில் இருந்தார். அந்த ஓவரில் தோனி 4, 6, 0, 4, 0, 6 என்று வரிசையாக 20 ரன்கள் விளாசினார்.

கடைசி வரை களத்தில் நின்ற தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்கள் எடுத்தார். இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டும் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. அதோடு, சிஎஸ்கே அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios