Asianet News TamilAsianet News Tamil

#SLvsIND இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் யார்..?

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் யார் இந்திய அணியை வழிநடத்தலாம் என்ற தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளருமான தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 

deep dasgupta opines who can captain team india in sri lanka tour
Author
Chennai, First Published May 11, 2021, 7:34 PM IST

இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடுகிறது. அதன்பின்னர் ஆகஸ்ட் - செப்டம்பரில் இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இதற்கிடையே ஜூலை மாதம் இலங்கையில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி ஆடவுள்ளது. அந்த காலக்கட்டத்தில் இந்திய மெயின் அணி இங்கிலாந்தில் இருக்கும் என்பதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் இடையேயான காலக்கட்டத்தில் இலங்கைக்கு வந்துவிட்டு மீண்டும் இங்கிலாந்துக்கு செல்வது சாத்தியமற்றது.

எனவே இலங்கைக்கு எதிரான தொடரில் வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் மற்றும் இந்திய அணியில் அடுத்து இடம்பெறவிருக்கும் வீரர்களை வைத்து இலங்கை தொடரில் ஆடவுள்ளது இந்திய அணி. ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய அணியாக அது இருக்கும்.

கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால் இலங்கை தொடருக்கான கேப்டன் யார் என்பதே கேள்வி. அணியின் சீனியர் வீரர் ஷிகர் தவான் கேப்டன்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தீப்தாஸ் குப்தா மற்றொரு ஆப்சன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய தீப்தாஸ் குப்தா, கோலி, ரோஹித், ராகுல் ஆகிய யாருமே இலங்கைக்கு செல்லமாட்டார்கள். எனவே சீனியர் வீரர் என்ற முறையில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்படுவார் என நினைக்கிறேன். ஆனால், புவனேஷ்வர் குமார் ஃபிட்னெஸ் பெற்று அணியில் இடம்பெறும் பட்சத்தில், அவரும் சிறந்த கேப்டன்சி தேர்வாக இருப்பார் என்பது என் கருத்து என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios