அபுதாபி டி10 லீக் அபுதாபியில் நடந்துவருகிறது. இந்த தொடரில் கர்நாடகா டஸ்கர்ஸ் மற்றும் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா டஸ்கர்ஸ் அணி 10 ஓவரில் 110 ரன்களை குவித்தது. 

111 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஷேன் வாட்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். முகமது ஷேஷாத், ஆண்டன் தேவ்கிச், டேனியல் லாரன்ஸ் ஆகியோரும் சரியாக ஆடவில்லை. 

அதன்பின்னர் கண்டிப்பாக அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த பொல்லார்டும் பானுகா ராஜபக்சாவும் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். பொல்லார்டு 22 பந்தில் 1 பவுண்டரி  மற்றும் 4 சிக்ஸர்களுடன் 45 ரன்களை விளாசினார். ராஜபக்சா வெறும் 7 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்களை விளாச, இவர்கள் இருவரின் அதிரடியால் 8.3 ஓவரிலேயே இலக்கை எட்டி டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.