தேவர் மகன் திரைப்படத்தின் இஞ்சி இடுப்பழகி பாடலின் மியூசிக்கிறகு டேவிட் வார்னர், தனது மனைவி மற்றும் மகளுடன் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

கொரோனா ஊரடங்கால் மனித குலமே வீடுகளில் முடங்கியுள்ளது. கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அதனால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வீடுகளில் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் சக வீரர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடுவது, சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்வது என பொழுதுபோக்கிவருகின்றனர். 

அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், தெலுங்கில் பெரிய ஹிட்டடித்த புட்ட பொம்மா பாடலுக்கு அண்மையில் தனது மனைவியுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி லைக்குகளை அள்ளியது. வார்னரின் நடனத்தை கண்டு, அல்லு அர்ஜூன் அவருக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். 

View post on Instagram

இந்நிலையில், டிக் டாக்கில் தனது மனைவி மற்றும் மகளுடன், உலகநாயகன் கமல்ஹாசனின் தேவர் மகன் திரைப்படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலின் மியூசிக்கிற்கு நடனம் ஆடியுள்ளார். தனது மனைவி மற்றும் மகளுடன், சூப்பராக வார்னர் ஆடிய நடனம் தற்போது செம வைரலாகி லைக்குகளை வாரி குவித்துவருகிறது. அந்த வீடியோ இதோ..

View post on Instagram