ஆஸி., ரசிகர்கள் இனவெறியுடன் முகமது சிராஜை விமர்சித்ததற்காக அவரிடமும், இந்திய வீரர்களிடமும் டேவிட் வார்னர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையே சிட்னியிள் நடந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜையும், அதேபோல பும்ராவையும், ஆஸி., ரசிகர்கள் சிலர் மது அருந்திவிட்டு இன ரீதியாக மட்டம்தட்டி பேசினார். இதுகுறித்து உடனடியாக முகமது சிராஜ் கள நடுவரிடம் புகார் அளித்தார். பின்னர் கேப்டன் ரஹானே மற்றும் சீனியர் வீரர் அஷ்வின் ஆகியோர் களநடுவர்களிடமும், போட்டி ரெஃப்ரியிடமும் புகார் அளித்தனர்.
இதையடுத்து, ஆறு ரசிகர்கள் ஸ்டேடியத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.
ஆஸி., ரசிகர்களின் செயலுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா பிசிசிஐயிடமும் இந்திய வீரர்களிடமும் மன்னிப்பு கேட்டது. ஐசிசி இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவரும் நிலையில், ஆஸி., ரசிகர்களின் செயலுக்காக, டேவிட் வார்னர் முகமது சிராஜிடமும் இந்திய வீரர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் டேவிட் வார்னர் இட்டுள்ள பதிவில், முகமது சிராஜ், இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இனவெறி தாக்குதல்களை எந்த காலத்திலும் எந்த இடத்திலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆஸி., ரசிகர்கள் நாகரிகத்துடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என வார்னர் தெரிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 12, 2021, 4:37 PM IST