Asianet News TamilAsianet News Tamil

ENG vs NZ: டேரைல் மிட்செல் அபார சதம்.. டாம் பிளண்டெல் பொறுப்பான பேட்டிங்..! மெகா ஸ்கோரை நோக்கி நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் டேரைல் மிட்செலின் அபாரமான சதத்தால் மெகா ஸ்கோரை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறது நியூசிலாந்து அணி.
 

daryl mitchell century and tom blundell responsible batting pave the way for new zealand to score big in second test
Author
Nottingham, First Published Jun 11, 2022, 4:35 PM IST

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று(ஜூன்10) தொடங்கி நடந்துவருகிறது. கொரோனா காரணமாக இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடாததால், டாம் லேதம் கேப்டன்சி செய்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணி அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வில் யங்(47) மற்றும் டாம் லேதம்(26) இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வில் யங் அரைசதத்தை தவறவிட்டு பென் ஸ்டோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். லேதமை ஆண்டர்சன் வீழ்த்தினார். அதன்பின்னர் டெவான் கான்வே மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய இருவரும் நன்றாகத்தான் ஆடினர்.

ஆனால் ஹென்ரி நிகோல்ஸ் 30 ரன்னிலும், டெவான் கான்வே 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 169 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி. அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டேரைல் மிட்செலும் டாம் பிளண்டெலும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர். இருவருமே அரைசதம் அடித்து முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர்.

2ம் நாளான இன்றைய ஆட்டத்தை டேரைல் மிட்செலும் பிளண்டெலும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்திலும் அபாரமாக பேட்டிங் ஆடிய டேரைல் மிட்செல் சதமடித்தார். டாம் பிளண்டெல் சதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார். 350 ரன்களை கடந்து மெகா ஸ்கோரை நோக்கி நியூசிலாந்து அணி ஆடிவருகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios