இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று கம்பேக் கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் ஆஸி., அணியும் உள்ளன. 

2வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. மெல்போர்ன் ஆடுகளம் இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று டேரன் லேமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டேரன் லேமன், இந்திய பவுலர்கள் கண்டிப்பாக சிறப்பாக பந்துவீசி ஆஸி., அணிக்கு தொல்லை கொடுப்பார்கள். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் பவுன்ஸை எதிர்கொண்டு சிறப்பாக ஆடுவார்கள் என்பதுதான் கேள்வி. ஆனால் மெல்போர்ன் ஆடுகளம் ஃப்ளாட்டாக இருப்பதால் இந்திய வீரர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதை பயன்படுத்தி நன்றாக ஆடி கம்பேக் கொடுக்கிறார்களா என்று பார்ப்போம் என்று டேரன் லேமன் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன் ஆடுகளம் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கான ஃப்ளாட்டான ஆடுகளமாக இருப்பதால் ஆஸி., அணி இந்திய அணியை கட்டுப்படுத்த பக்காவான சாமர்த்தியமான திட்டங்களுடன் வந்தாக வேண்டும்.