IPL 2023: CSK vs KKR போட்டி டாஸ் ரிப்போர்ட்..! கேகேஆர் அணியில் ஒரு அதிரடி மாற்றம்
கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, ஒரு வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். கேகேஆர் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றாகவேண்டும்.
எனவே சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய 2 அணிகளுமே வெற்றி கட்டாயத்தில் களமிறங்குகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் களமிறங்குகிறது. கேகேஆர் அணியில் அனுகுல் ராய்க்கு பதிலாக வைபவ் அரோரா ஆடுகிறார்.
கேகேஆர் அணி:
ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் ஷர்மா, வருண் சக்கரவர்த்தி.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா, மதீஷா பதிரனா.