ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த சீசனில் சிஎஸ்கே கேப்டன் நீண்ட ஹேர்ஸ்டைலுடன் களமிறங்கி விளையாட இருக்கிறார்.
ஐபிஎல் என்றாலே தோனி தான் என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்தவர் தோனி. சிஎஸ்கே விளையாடும் போட்டி மட்டுமில்லாமல், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளாக இருந்தாலும் சரி மைதானத்தில் ஒரே மஞ்சள் நிற ஜெர்சியுடன் தான் ரசிகர்கள் காணப்படுவார்கள். ஒவ்வொரு சீசனிலும் தோனி விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபிஎல் தொடர் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டே சிஎஸ்கே மீண்டும் களமிறங்கியது. இதுவரையில் நடந்த 16 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5 முறை டிராபியை கைப்பற்றியதோடு, 5 முறை 2 ஆவது இடமும் பிடித்தது. இந்த நிலையில் தான் ஒவ்வொரு சீசனிலும் தோனி விதவிதமான ஹேர்ஷ்டைலுடன் விளையாடியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை ஜியோ சினிமா வெளியிட்டுள்ளது. அதன்படி 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி நார்மல் ஹேர்ஷ்டைலுடன் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொட்டை தலையில் லேசாக முடியுடன் களமிறங்கியுள்ளார். 2014 ஆம் ஆண்டு அதே போன்று ஒரு தோற்றத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்பைக் போன்ற ஒரு தோற்றத்துடன் ரசிகர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். 2021 ஆம் ஆண்டு சைடு பக்கம் முடி இல்லாத தோற்றத்துடன் விளையாடியுள்ளார். 2022 ஆம் ஆண்டு நார்மல்லான தோற்றத்துடன் விளையாடியிருக்கிறார். கடந்த ஆண்டு தாடி முடியுடன் இருப்பது போன்ற ஒரு தோற்றத்துடன் காட்சி கொடுத்துள்ளார். கடைசியாக இந்த ஆண்டு நிறைய முடியுடன் இருப்பது போன்று தோற்றத்துடன் விளையாட இருக்கிறார்.
