IPL 2023: நரைன், வருண் அபார பவுலிங்.. ஷிவம் துபே பொறுப்பான பேட்டிங்..! KKR-க்கு எளிய இலக்கை நிர்ணயித்தது CSK
கேகேஆருக்கு எதிரான முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 144 ரனக்ள் மட்டுமே அடித்து 145 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசனில் இன்றைய முக்கியமான போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் ஆடிவருகின்றன. 15 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடலாம் என்ற நிலையில், இந்த போட்டியில் ஆடிவருகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கேகேஆர் அணியில் அனுகுல் ராய்க்கு பதிலாக வைபவ் அரோரா ஆடினார்.
கேகேஆர் அணி:
ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் ஷர்மா, வருண் சக்கரவர்த்தி.
IPL 2023: ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் மோசமான சாதனை..! ஐபிஎல் வரலாற்றில் டாப் 3 குறைவான ஸ்கோர்கள்
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா, மதீஷா பதிரனா.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களும், டெவான் கான்வே 30 ரன்களும் மட்டுமே அடித்தனர். வழக்கமாக அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்கக்கூடிய இவர்கள் இருவரும், ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்ததால் அவர்களால் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுக்க முடியவில்லை எனினும் நல்ல தொடக்கத்தை அமைத்தனர்.
அதன்பின்னர் ரஹானே 16 ரன்களுக்கும், ராயுடு 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மொயின் அலி ஒரு ரன்னுக்கும், ஜடேஜா 20 ரன்களுக்கும் வெளியேறினர். ஷிவம் துபே நிலைத்து நின்று அடித்து ஆடி 34 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் அடித்து கடைசிவரை நின்று இன்னிங்ஸை முடித்து கொடுக்க, 20 ஓவரில் 144 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 145 ரன்கள் என்ற இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது.
சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி ரன்கலை கட்டுப்படுத்தியதுடன் தலா 2 விக்கெட் வீழ்த்தி சிஎஸ்கேவை 144 ரன்களுக்கு கட்டுப்படுத்த உதவினர்.