ஜடேஜாவின் மோசமான ஃபார்ம் குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலக, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்படவில்லை. ஜடேஜாவின் கேப்டன்சியில் தொடர் தோல்விகளை தழுவியது சிஎஸ்கே அணி. கேப்டன்சி அழுத்தத்தால் ஜடேஜா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சொதப்பினார். சிஎஸ்கே அணியும் தொடர் தோல்விகளை தழுவியது. அதன்விளைவாக கேப்டன்சியிலிருந்து ஜடேஜா விலகியதையடுத்து தோனி மீண்டும்கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னரும், ஜடேஜாவின் ஆட்டம் சரியில்லை. இந்த சீசனில் இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 116 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். பவுலிங்கிலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஃபீல்டிங்கிலும் சொதப்புகிறார்.
ஜடேஜா மோசமான ஃபார்மில் இருக்கும் நிலையில், இதுகுறித்து பேசிய சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங், 5 - 6ம் வரிசைகளில் பேட்டிங் ஆடுவது சுலபமல்ல. ஏனெனில் செட்டில் ஆக நேரம் இருக்காது. பேட்டிங் ஆர்டரில் கவனம் செலுத்திவருகிறோம். எனவே ஜடேஜாவின் ஃபார்மை பற்றி நான் கவலைப்படவில்லை என்று ஃப்ளெமிங் தெரிவித்தார்.
