ஹர்திக் பாண்டியா மாதிரியான இளம் அதிரடி ஆல்ரவுண்டரான ராஜவர்தன் ஹங்கர்கேகரை ரூ.1.50 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் எடுத்துள்ளது சிஎஸ்கே. 

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி, சில தரமான இளம் வீரர்களை எடுத்துள்ளது. வயதான வீரர்கள் நிறைந்த அணி என்ற பெயர் பெற்ற சிஎஸ்கே அணி, இந்த ஏலத்தில் ராஜவர்தன் ஹங்கர்கேகர், சிமர்ஜீத் சிங், ஷிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே, பிரஷாந்த் சோலங்கில், முகேஷ் சௌத்ரி, சுப்ரன்ஷு சேனாபதி ஆகிய இளம் வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது.

இவர்களில் ராஜ்வர்தன் ஹங்கர்கேர் கொஞ்சம் ஸ்பெஷல். அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங் என அதிரடி ஆல்ரவுண்டர் இவர். ஹர்திக் பாண்டியா மாதிரியான அதிரடி ஆல்ரவுண்டரை கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, அவரது இடத்தை ஹங்கர்கேகரை வைத்து நிரப்ப திட்டமிட்டு, ஏலத்தில் அவரை எடுக்க முனைந்தது.

ஆனால் ஹங்கர்கேர் மீது சிஎஸ்கேவும் ஆர்வம் காட்டியது. இருபெரும் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஹங்கர்கேகருக்காக போட்டி போட்டன. இதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான் எனக்கூறலாம். இரு அணிகளும் ஆர்வம் காட்ட, கடைசியில் ரூ.1.5 கோடிக்கு சிஎஸ்கே அணி அவரை எடுத்தது.

அண்டர் 19 உலக கோப்பையை அண்மையில் வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். உள்நாட்டு போட்டிகளில் மகாராஷ்டிரா அணிக்காகவும் ஆடியிருக்கிறார்.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிரட்டக்கூடிய இளம் ஆல்ரவுண்டரை சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. ஜடேஜா, தீபக் சாஹர், பிராவோ, மொயின் அலி என பொதுவாகவே ஆல்ரவுண்டர்கள் மீது ஆர்வம் காட்டும் சிஎஸ்கே, அந்தவகையில் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இந்த இளம் ஆல்ரவுண்டர் ஹங்கர்கேகரை எடுத்துள்ளது.