Asianet News TamilAsianet News Tamil

விடாது விரட்டும் கொரோனா.. சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹசிக்கு கொரோனா பாசிட்டிவ்..!

கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் 14வது சீசன் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
 

csk batting coach michael hussey tested corona positive
Author
Chennai, First Published May 4, 2021, 10:34 PM IST

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐபிஎல் 14வது சீசனின் பாதி லீக் சுற்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கூட வீரர்களுக்கு கொரோனா பரவியது. கொரோனா 2ம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவிவரும் வேளையில், ஐபிஎல் மட்டுமே மக்களுக்கு சில மணி நேர மகிழ்ச்சியை அளித்துவந்த நிலையில், அதற்கும் கொரோனா ஆப்படித்துவிட்டது.

ஐபிஎல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு பயந்து பிசிசிஐ ஐபிஎல்லை விட்டாலும், கொரோனா என்னவோ ஐபிஎல்லை விடுவதாயில்லை. சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்  மைக்கேல் ஹசிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே கொரோனாவுக்கு பயந்து, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியர்கள் யாருமே ஆஸ்திரேலியாவிற்குள் நுழையக்கூடாது என்றும் மீறி நுழைந்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஆஸி., அரசாங்கம் எச்சரித்திருந்த நிலையில், ஆஸ்திரேலியர்கள் எப்படி நாட்டிற்கு திரும்புவது என்ற குழப்பத்தில் உள்ள நிலையில், மைக்கேல் ஹசிக்கு கொரோனா உறுதியாகிருப்பது ஆஸ்திரேலியர்களின் நிலையை இன்னும் மோசமாக்கியுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios