சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் 4 முறை சாம்பியனும், நடப்பு சாம்பியனுமான சிஎஸ்கே அணி படுமோசமாக விளையாடி, ஆடிய 4 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
முதல் வெற்றியை எதிர்நோக்கியிருக்கும் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி, இன்று ஆர்சிபியை எதிர்கொள்கிறது. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனில் ஃபாஃப் டுப்ளெசிஸின் கேப்டன்சியில் இறன்க்கியுள்ள ஆர்சிபி அணி அருமையாக ஆடி வெற்றி பெற்றுவருகிறது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஆர்சிபி அணி 3ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
சிஎஸ்கே அணியில் கடந்த போட்டியில் ஆடிய மஹீஷ் தீக்ஷனாவின் இடத்திற்கு, அவர் உட்பட மூவருக்கு இடையே போட்டி நிலவுகிறது. மஹீஷ் தீக்ஷனா - ட்வைன் ப்ரிட்டோரியஸ் - ஆடம் மில்னே ஆகிய மூவரில் ஒருவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, தோனி (விக்கெட் கீப்பர்), ட்வைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், மஹீஷ் தீக்ஷனா/ப்ரிட்டோரியஸ்/ஆடம் மில்னே.
சகோதரி இறந்ததால் பயோ பபுளிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள ஹர்ஷல் படேல், இந்த போட்டியில் ஆடமாட்டார். எனவே அவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் இறங்குவார்.
உத்தேச ஆர்சிபி அணி:
ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
