Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: ஃபைனலுக்கு முன்னேறப்போவது யார்.? முதல் தகுதிப்போட்டியில் மோதும் GT - CSK அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஐபிஎல் 16வது சீசனின் முதல் தகுதிப்போட்டியில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

csk and gujarat titans teams probable playing eleven for first qualifier match in ipl 2023
Author
First Published May 23, 2023, 2:41 PM IST

ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.

இன்று  சென்னையில் நடக்கும் முதல் தகுதிப்போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும். மே 24ம் தேதி நடக்கும் எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணி, முதல் தகுதிப்போட்டியில் தோற்கும் அணியை எதிர்கொள்ளும்.

IPL 2023: மும்பை இந்தியன்ஸ் கொடுத்த தொகைக்கு நீ ஒர்த் தான்ப்பா! கேமரூன் க்ரீனுக்கு இர்ஃபான் பதான் பாராட்டு

இன்று சென்னையில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. பலமான 2 அணிகள் மோதும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா, மதீஷா பதிரனா. 

IPL 2023: ஆர்சிபியிலிருந்து விலகும் விராட் கோலி..? எந்த அணியில் இணைகிறார் தெரியுமா..?

உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், தசுன் ஷனாகா, ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios