Asianet News TamilAsianet News Tamil

CSKவிற்கு கோப்பையை ஜெயிச்சு கொடுத்துட்டீங்க; வாழ்த்துகள் இங்கிடி! டுப்ளெசிஸ், தாஹிரை வாண்டடா ஒதுக்கிய CSA

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் டுப்ளெசிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் மீது காட்டிய வஞ்சம் ரசிகர்களையும் முன்னாள், இந்நாள் வீரர்களையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
 

cricket south africa congratulates lungi ngidi on csk winning of ipl trophy but leaves out faf du plessis and imran tahir
Author
Chennai, First Published Oct 16, 2021, 7:52 PM IST

ஐபிஎல் 14வது சீசன் ஃபைனலில் கேகேஆரை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் - டுப்ளெசிஸ் ஆகிய இருவரும் தான் முக்கிய காரணம்.

இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் டாப் 2 இடத்தில் ருதுராஜும்(635), டுப்ளெசிஸுமே(633) உள்ளனர். இருவருக்கும் இடையேயான ரன் வித்தியாசம் வெறும் 2 தான். இவர்களது சிறப்பான பேட்டிங் தான் சிஎஸ்கே அணி இந்த சீசனில் அபாரமாக ஆடி கோப்பையை வெல்ல காரணம்.

அப்படியிருக்கையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயல் படுமட்டமாக இருந்தது. சிஎஸ்கே அணியில் டுப்ளெசிஸ், இம்ரான் தாஹிர், லுங்கி இங்கிடி ஆகிய 3 தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆடிய நிலையில், சிஎஸ்கேவின் வெற்றியை தொடர்ந்து, சிஎஸ்கேவின் வெற்றியில் பங்களித்த லுங்கி இங்கிடிக்கு வாழ்த்துகள் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தது.

உண்மையாகவே சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த டுப்ளெசிஸ் பெயரையும், சீனியர் ஸ்பின்னர் இம்ரான் தாஹிரின் பெயரையும் வேண்டுமென்றே புறக்கணித்தது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். 

டுப்ளெசிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காகவே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற டுப்ளெசிஸ், டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் புறக்கணிக்கப்பட்டது, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இந்த டுவீட்டை கண்டு கடும் அதிருப்தியடைந்த டேல் ஸ்டெய்ன் கடுமையாக சாடியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios