Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா

இந்தியாவின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான புதிய போட்டி அட்டவணையை வெளியிட்டது கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா.
 

cricket south africa announces new schedule for india series
Author
South Africa, First Published Dec 6, 2021, 8:22 PM IST

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் ஆடுவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தாமதமாகியுள்ளது.

வரும் 17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதாக இருந்தது. 2வது டெஸ்ட் வரும் 26 மற்றும் 3வது டெஸ்ட் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்வது தாமதமானதால், டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் மட்டுமே ஆடுகிறது.

வரும் 17ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்குவதாக இருந்த நிலையில், இப்போது முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்கவுள்ளது. 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான புதிய போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30, செஞ்சூரியன்

2வது டெஸ்ட்: ஜனவரி 3-7, ஜோஹன்னஸ்பர்க்

3வது டெஸ்ட்: ஜனவரி 11-15, கேப்டவுன்

முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19, பார்ல்

2வது ஒருநாள் போட்டி: ஜனவரி 21, பார்ல்

3வது ஒருநாள் போட்டி: ஜனவரி 23, கேப்டவுன்
 

Follow Us:
Download App:
  • android
  • ios