மீண்டும் ஒன்றிணைந்த லெஜெண்ட்ஸ் – மும்பை ஹோட்டலில் சச்சின், ரோகித், தோனி – கண்கொள்ளா காட்சி!

சச்சின், ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனி மூவரும் ஒன்றிணைந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Cricket Legends Reunion: MS Dhoni, Sachin Tendulkar and Rohit Sharma are spotted at Mumbai Hotel ahead of MI vs CSK in 29th IPL Match at Wankhede Stadium rsk

சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது தோனி மட்டுமே ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார். விரைவில் ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெற இருக்கிறார். அது இந்த ஐபிஎல் தொடர் அல்லது அடுத்த ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரோகித் சர்மா மட்டுமே அனைத்து பார்மேட்டுகளிலும் விளையாடி வருகிறார். அதோடு, ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருகிறார்.

 

 

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. சென்னையில் தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதுவரையில் சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.

இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி வரும் 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா மூவரும் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஆச்சரியம் என்னவென்றால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். இதே போன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது புகைப்படம் தோனி ஃபேன்ஸ் கிளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios