Asianet News TamilAsianet News Tamil

அது உண்மை இல்லையாம் ஊடகங்கள் கிளப்பிவிடுதாம்.. சொல்றது யாருனு பாருங்க.. நெருப்பில்லாமல் புகையாது அல்லவா..?

ஆசிய கோப்பையை வென்றபிறகு, ரோஹித் சர்மா அதிரடியான ஒரு பேட்டியை கொடுத்தார். இந்திய அணியின் முழுநேர கேப்டனாக தன்னை நியமித்தால், அதை ஏற்று கேப்டனாக செயல்பட தயார் என்று வெளிப்படையாக தனது கேப்டன் ஆசையை தெரிவித்தார். 

coa chief vinod rai speaks about rohit kohli rift
Author
India, First Published Jul 27, 2019, 1:19 PM IST

சர்வதேச அளவிலும் இந்திய அணியிலும் டாப் 2 பேட்ஸ்மேன்கள் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும்தான். விராட் கோலியின் கேப்டன்சி மீது கடும் விமர்சனங்கள் உள்ளன. அதேநேரத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பல தருணங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

ஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடாத நிலையில், அந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, அணியை சிறப்பாக வழிநடத்தி ஆசிய கோப்பையை வென்றுகொடுத்தார். அதற்கு முன்னதாக நிதாஹஸ் டிராபி டி20 தொடரையும் ரோஹித் சர்மா வென்று கொடுத்தார். இவ்வாறு கேப்டனாக செயல்பட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் ரோஹித் சர்மா. 

coa chief vinod rai speaks about rohit kohli rift

ஆசிய கோப்பையை வென்றபிறகு அதிரடியான ஒரு பேட்டியையும் கொடுத்தார். இந்திய அணியின் முழுநேர கேப்டனாக தன்னை நியமித்தால், கேப்டனாக செயல்பட தயார் என்று அதிரடியாக பேட்டி கொடுத்தார். அப்போதே ரோஹித்தின் கேப்டன்சி ஆசையும் கோலிக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதும் தெரியவந்தது. 

உலக கோப்பை தோல்விக்கு பின்னர் மீண்டும் ரோஹித் - கோலி மோதல் குறித்த விவாதம் எழுந்தது. கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித்தின் ஆலோசனையை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும், ரோஹித் - கோலியின் தலைமையில் இரண்டு கேங்குகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

coa chief vinod rai speaks about rohit kohli rift

இந்நிலையில், ஏற்கனவே விராட் கோலியை இன்ஸ்டாக்ராமில் அன்ஃபாலோ செய்திருந்த ரோஹித் சர்மா, அண்மையில் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை அன்ஃபாலோ செய்தார். ரோஹித்தின் இந்த செயல், ஏற்கனவே ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையேயான மோதல் குறித்து பேசியவர்களுக்கு நல்ல இறையாக அமைந்தது. கோலியுடனான மோதலை உறுதிப்படுத்தும் விதமாகவே ரோஹித் சர்மா இவ்வாறு செய்ததாக பேசப்படுகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயிடம் கேள்வி எழுப்பியதற்கு, இதெல்லாம் ஊடகங்களாகிய நீங்கள் கிளப்பிவிடுவதுதான் என்று கூறியதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. நெருப்பில்லாமல் புகையாதல்லவா..?, வினோத் ராய்...
 

Follow Us:
Download App:
  • android
  • ios