Asianet News TamilAsianet News Tamil

தோனி எடிஷன் என்ற பெயரில் புதிய காரை அறிமுகம் செய்த சிட்ரோயன் நிறுவனம், விலை எவ்வளவு தெரியுமா?

பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு சென்னையில் இயங்கி வரும் சிட்ரோயன் என்ற ஆட்டோமொபைல் நிறுவனம் தோனி எடிஷன் என்ற பெயரில் புதிதாக கார் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Citroen India Launched C3 Aircross Dhoni Edition Car India with prices start at Rs. 11.82 lakh rsk
Author
First Published Jun 21, 2024, 11:46 AM IST

நாளுக்கு நாள் வளர்ச்சி அடையும் தொழில் நுட்பம் காரணமாக புதிது புதிதாக கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்டு சென்னையில் இயங்கி வரும் சிட்ரோயன் இந்தியா என்ற ஆட்டோமொபைல் நிறுவனம் தோனி எடிஷன் என்ற பெயரில் புதிதாக கார் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிட்ரோயன் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் தோனி எடிஷன் என்ற பெயரில் புதிதாக கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோனி எடிஷன் என்ற பெயர் கொண்ட காரின் விலையானது எக்ஸ் ஷோரூமில் ரூ.11.82 லட்சம் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய சி3 ஏர்க்ராஸ் தோனி எடிஷன் காரின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், தோனி டிகால்ஸ் மற்றும் கலர் ஒருங்கிணைக்கப்பட்ட இருக்கை கவர்கள், குஷன்கள், சீட்பெல்ட் குஷன்கள் முன் டேஷ்கேம் மற்றும் ஒளிரும் சில பிளேட்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. அதே நேரத்தில் தோனியால் கையெழுத்திடப்பட்ட கையுறையும் இதில் அடங்கியுள்ளது.

தோனி எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்ச்சியின் போது பேசிய சிட்ரோயன் இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் ஷிஷிர் மிஸ்ரா கூறியிருப்பதாவது: சி3 ஏர்கிராஸின் பிரத்யேக தோனி எடிஷன் காரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது வரையறுக்கப்பட்ட 100 யூனிட்களில் கிடைக்கிறது. எங்களின் பிராண்ட் அம்பாசிடர் தோனி, சிறந்த அனுபவங்களை வழங்குவதில் சிட்ரோயனின் அர்ப்பணிப்புடன் முழுமையாக இணைந்திருக்கும் அனைத்து குணங்களும், தலைமைத்துவம் மற்றும் சிறந்து விளங்குகிறது என்று கூறியுள்ளார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios