Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 என் மேல நம்பிக்கை இல்லாம சிங்கிள் மறுக்குறியா நீ..? சாம்சனுக்கு கிறிஸ் மோரிஸ் சொன்ன சேதி..!

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வெற்றியை தேடிக்கொடுத்த கிறிஸ் மோரிஸ், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு, தான் யார் என்பதை நிரூபித்திருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
 

chris morris proves what he can do with bat for rajasthan royals in ipl 2021
Author
Mumbai, First Published Apr 16, 2021, 5:19 PM IST

டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 42 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. டேவிட் மில்லர் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றி நம்பிக்கை அளித்தாலும், வெற்றி பெற வைத்தது என்னவோ கிறிஸ் மோரிஸ் தான்.

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மில்லர் 16வது ஓவரில் ஆட்டமிழக்க, கடைசி 4 ஓவரில் 45 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் 2 சிக்ஸர்கள், கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசி, 18 பந்தில் 36 ரன்களை அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார்.

chris morris proves what he can do with bat for rajasthan royals in ipl 2021

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி பந்தில் 2 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், சதமடித்து களத்தில் இருந்த சஞ்சு சாம்சன், 5வது பந்தில் பெரிய ஷாட் ஆடாத நிலையில், மறுமுனையில் நின்ற கிறிஸ் மோரிஸுக்கு சிங்கிள் ஓட மறுத்தார். அதனால் கிட்டத்தட்ட பேட்டிங் க்ரீஸ் வரை சென்ற மோரிஸ், திரும்பிவந்தார். அதனால் கடைசி பந்தில் சாம்சன், சிக்ஸர் விளாச வேண்டிய கட்டாயம் உருவானது. அது முடியாமல் அந்த அணி தோல்வியை தழுவியது.

ராஜஸ்தான் அணி நிர்வாகம் மிகுந்த நம்பிக்கை வைத்து, மிகப்பெரிய ஆல்ரவுண்டராக மதித்து ரூ.16.25 கோடிக்கு  ஏலத்தில் எடுத்த மோரிஸ் மீது நம்பிக்கை வைக்காமல் சிங்கிள் மறுத்தார் சாம்சன். தான் நன்றாக ஆடிக்கொண்டிருந்ததால், தன்னால் தான் போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் சாம்சன் சிங்கிளை மறுத்தார். இந்நிலையில், தன்னால் சிறப்பாக ஃபினிஷிங் செய்து போட்டியை ஜெயித்து கொடுக்க முடியும் என்பதை, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் நிரூபித்து காட்டினார் கிறிஸ் மோரிஸ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios