Asianet News TamilAsianet News Tamil

நான் பொதுவா டிவி பார்க்கமாட்டேன்.. ஆனால் அந்த போட்டியை டிவியில் கண்டிப்பா பார்க்கப்போறேன்.. கேகேஆர் வீரர் ஆர்வம்

சன்ரைசர்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. 

chris lynn is going to watch sunrisers vs rcb match in tv
Author
India, First Published May 4, 2019, 12:41 PM IST

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன் லீக் சுற்று முடிவடைந்து 7ம் தேதி முதல் பிளே ஆஃப் தொடங்குகிறது. 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. எஞ்சிய ஒரு இடத்தை பிடிப்பதற்கு கேகேஆர், சன்ரைசர்ஸ், பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. நேற்றைய போட்டியில் தோற்றதை அடுத்து இந்த போட்டியிலிருந்து பஞ்சாப் அணி விலகிவிட்டது. 

கேகேஆரும் பஞ்சாப்பும் வெற்றி கட்டாயத்தில் நேற்றைய போட்டியில் மோதின. இந்த போட்டியில் கேகேஆரிடம் பஞ்சாப் அணி தோற்றதால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. சன்ரைசர்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. 

chris lynn is going to watch sunrisers vs rcb match in tv

சன்ரைசர்ஸ் அணி கடைசி போட்டியில் ஆர்சிபியையும் கேகேஆர் அணி மும்பை இந்தியன்ஸையும் எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் முனைப்பில் உள்ளதால் அந்த போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணிதான் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும். ஒருவேளை கேகேஆர் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மாபெரும் வெற்றி பெற்றால் கேகேஆர் அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. 

அப்படியில்லாமல் கடைசி போட்டியில் இரு அணிகளில் ஏதாவது ஒரு அணி வென்றால் அந்த அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெறும். ஒருவேளை கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளுமே அவற்றின் கடைசி போட்டியில் தோற்று, அதேநேரத்தில் கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால் ராஜஸ்தான் அணிதான் பிளே ஆஃபிற்கு முன்னேறும். ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. கடைசி போட்டியில் வென்றால் 13 புள்ளிகளை பெறும். சன்ரைசர்ஸும் கேகேஆரும் கடைசி போட்டியில் தோற்றால் 12 புள்ளிகளுடன் வெளியேற நேரிடும். 

chris lynn is going to watch sunrisers vs rcb match in tv

இவ்வாறு கேகேஆரின் பிளே ஆஃப் வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணியையும் சார்ந்திருக்கிறது. வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் அணி, ஆர்சிபியை இன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி தோற்பது கேகேஆர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்கும் என்பதால், இந்த போட்டியை டிவியில் காண இருப்பதாக கிறிஸ் லின் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்து கேகேஆர் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கிறிஸ் லின் போட்டி முடிந்து பேசும்போது, நான் பொதுவாக டிவி அதிகம் பார்க்கமாட்டேன். எனினும் சன்ரைசர்ஸ் அணி, ஆர்சிபியுடன் ஆடும் போட்டியை டிவியில் பார்க்க உள்ளேன் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios