கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் அண்மையில் முடிந்தது. இந்த சீசன் முழுவதும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்த ஷோயப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, இறுதி போட்டியில் பார்படோஸ் டிரைடண்ட்ஸ் அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது. 

இந்த தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படோஸ் டிரைடண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டிரைடண்ட்ஸ் அணி வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டிரைடண்ட்ஸ் அணி 160 ரன்கள் அடித்தது. 161 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நைட் ரைடர்ஸ் அணி 148 ரன்கள் மட்டுமே அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

அந்த போட்டியில் டிரைடண்ட்ஸ் அணியின் பேட்டிங்கில், அந்த அணியின் வீரர் ஜோனாதன் கார்ட்டரை நைட் ரைடர்ஸ் அணி வீரர் கிறிஸ் ஜோர்டான் வீழ்த்தினார். 4 ரன்கள் அடித்திருந்த கார்ட்டரை, ஜோர்டான் அவரே பந்துவீசி அவரே அபாரமான கேட்ச்சும் பிடித்து அவுட்டாக்கினார். பந்துவீசிவிட்டு உடனே கேட்ச் செய்வதே கடினம். அதுவும் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு கூடுதல் கஷ்டம். அப்படியிருந்தும், கார்ட்டர் அடித்த பந்தை, கொஞ்சம் கூட தாமதிக்காமல், அபாரமாக டைவ் அடித்து இடது கையில் பிடித்தார். பந்துவீசிய பவுலரே பிடித்த சிறந்த கேட்ச்களில் இதுவும் ஒன்று. அந்த வீடியோ இதோ..