Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்துக்கு எதிராக தரமான சம்பவம் பண்ண கெய்ல்.. ஜாம்பவான்களை எல்லாம் தூக்கியடித்த யுனிவர்ஸ் பாஸ்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

chris gayle record against england in odi
Author
England, First Published Jun 14, 2019, 4:37 PM IST

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடிவருகின்றன. 

சவுத்தாம்ப்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 3 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கெய்லும் எவின் லெவிஸும் களமிறங்கினர். 

கெய்லும் லெவிஸும் நிதானமாக தொடங்கினர். அவசரப்பட்டு தொடக்க ஓவர்களில் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. களத்தில் நிலைத்துவிட்டால் பின்னர் அடித்து ஆடலாம் என்பதை உணர்ந்த கெய்ல், மிகவும் நிதானமாக தொடங்கினர். முதல் ரன்னையே 10 பந்துகளில் தான் எடுத்தார். ஆனால் லெவிஸ் வெறும் 2 ரன்களில் மூன்றாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். 

chris gayle record against england in odi

அதன்பின்னர் கெய்லுடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். ஹோப் நிதானமாக ஆட, கெய்ல் அதிரடியை தொடங்கினார். 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 36 ரன்கள் அடித்த கெய்ல், பிளங்கெட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். 36 ரன்களில் ஆட்டமிழந்தாலும் இங்கிலாந்துக்கு எதிராக தரமான சம்பவம் ஒன்றை செய்தார் கெய்ல். 

வோக்ஸ் வீசிய 8வது ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் மூன்றாவது பந்தில் சிக்ஸரும் அடித்த கெய்ல், இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக 41 இன்னிங்ஸ்களில் 1625 ரன்களை அடித்திருந்த சங்கக்கரா தான், இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார். சங்கக்கராவிற்கு அடுத்தடுத்த இடங்களில் விவியன் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங், ஜெயவர்தனே ஆகியோர் இருந்தனர். 

chris gayle record against england in odi

தற்போது சங்கக்கராவின் சாதனையை 34 இன்னிங்ஸ்களில் முறியடித்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios