Asianet News TamilAsianet News Tamil

22ம் தேதி எல்லாரோட அவரும் இங்கிலாந்துக்கு பறப்பாரு.. முதல் போட்டியில் ஆடவும் செய்வாரு.. தேர்வுக்குழு தலைவர் திட்டவட்டம்

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன.
 

chief selector msk prasad confirmed kedar jadhav available for first world cup match
Author
India, First Published May 21, 2019, 12:45 PM IST

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன.

chief selector msk prasad confirmed kedar jadhav available for first world cup match

இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவிற்கு, ஐபிஎல்லில் அடிபட்டதால் அத்துடன் ஐபிஎல்லில் இருந்து விலகினார். உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருக்கும் கேதர் ஜாதவ், மிடில் ஆர்டரின் முக்கியமான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது தேவைப்படும்போது பவுலிங் போட்டு விக்கெட்டையும் வீழ்த்தக்கூடியவர். இந்த உலக கோப்பையில் அவர் முக்கியமான வீரராக திகழ்வார் என கருதப்பட்ட நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக யாரை அழைத்து செல்லலாம் என்கிற அளவுக்கு பேசப்பட்டது. 

chief selector msk prasad confirmed kedar jadhav available for first world cup match

கேதர் ஜாதவ் பேட்டிங்கில் 6ம் வரிசையில் செட் ஆகிவிட்டதால் மிடில் ஆர்டரில் அவரது பேட்டிங் முக்கியமான ஒன்று. ஆனால் அவரது உடற்தகுதி குறித்த தகவல்கள் வராததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். கேதர் ஜாதவின் உடற்தகுதியை கண்காணித்துவந்த இந்திய அணியின் ஃபிசியோ பாட்ரிக், கேதர் ஜாதவ் முழு உடற்தகுதி பெற்றுவிட்டதாக பிசிசிஐ-க்கு அண்மையில் ரிப்போர்ட் கொடுத்திருந்தார். 

chief selector msk prasad confirmed kedar jadhav available for first world cup match

ஆனாலும் அவர் அணியில் கண்டிப்பாக இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வராமல் இருந்தது. இந்நிலையில், கேதர் ஜாதவ் முழு உடற்தகுதி பெற்றுவிட்டதாக ஃபிசியோ கொடுத்த ரிப்போர்ட் மகிழ்ச்சியளிப்பதாகவும் இந்திய அணியுடன் 22ம் தேதி கேதர் ஜாதவும் இங்கிலாந்துக்கு செல்கிறார் என்றும் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவரை அணியில் எடுக்குமளவிற்கு முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கிரிக்கெட் நெக்ஸ்டிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கேதர் ஜாதவ் உலக கோப்பையில் ஆடுவது உறுதியாகிவிட்டது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios