இந்திய கிரிக்கெட் அணியில் எம்.எஸ்.கே.பிரசாத்துக்கு அடுத்து சுனில் ஜோஷி தலைமை தேர்வாளராக இருந்துவந்தன் நிலையில், புதிய தலைமை தேர்வாளர் உட்பட 3 தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான போட்டிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அஜித் அகார்கர், நயன் மோங்கியா, சேத்தன் சர்மா, அபே குருவில்லா, தேபாஷிஷ் மொஹாந்தி உட்பட 11 பேரை வடிகட்டி, அவர்களை நேர்காணல் செய்தது, மதன் லால் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு.

இவர்களில் சேத்தன் சர்மா, அபே குருவில்லா, தேபாஷிஷ் மொஹாந்தி ஆகிய மூவரையும் தேர்வுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்த கிரிக்கெட் ஆலோசனைக்குழு சேத்தன் சர்மாவை தேர்வுக்குழுவின் தலைவராக தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியின் தலைமை தேர்வாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய சேத்தன் சர்மா, இந்திய கிரிக்கெட்டுக்காக மீண்டும் உழைக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை. எனது பேச்சைவிட செயல்பாடுதான் வீரியமாக இருக்கும். எனவே செயலில் காட்ட விரும்புகிறேன். இந்த வாய்ப்பளித்ததற்கு பிசிசிஐக்கு நன்றி என்று சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.