தோனி கடந்த ஓராண்டாக எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் தான் கடைசியாக ஆடினார். அதன்பின்னர் ஆடவேயில்லை. தோனியின் ஓய்வு குறித்த விவாதம் தீவிரமாக நடந்தபோதும் கூட, அதுகுறித்து தோனி மௌனம் காத்தே வருகிறார். 

இந்த ஆண்டுக்கான பிசிசிஐயின் இந்திய வீரர்கள் ஊதிய ஒப்பந்தத்தில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. ஆனாலும் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி, டி20 உலக கோப்பையில் ஆடும் முனைப்பில் தோனி இருந்தார். ஆனால் கொரோனாவால் ஐபிஎல் தள்ளிப்போகியுள்ளது. டி20 உலக கோப்பையும் ஒத்திவைக்கப்படவுள்ளது. எனவே தோனியின் கிரிக்கெட் கெரியர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தள்ளிப்போனால் கண்டிப்பாக தோனி ஆடுவது சந்தேகம் தான். தோனி டி20 உலக கோப்பையில் ஆட வேண்டுமா இல்லையா என்ற விவாதமும் நடந்துவருகிறது. 

தோனியை வைத்து விவாதம் காரசாரமாக நடந்தாலும், அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், கொரோனா லாக்டவுனை மனைவி, மகளுடன் கொண்டாடிவருகிறார். மகள் ஸிவாவுடன் பைக்கில் ரைடு, டிராக்டர் ஓட்டுவது, இயற்கை விவசாயம் என தோனியின் செயல்பாடுகள் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

அந்தவகையில், ஐபிஎல் கண்டிப்பாக செப்டம்பர் இறுதியில் தொடங்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ள நிலையில், ரசிகர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் விதமாக சிஎஸ்கே, தோனியின் சமீபத்திய வீடியோ ஒன்றை பின்னணி இசையை சேர்த்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.