Asianet News TamilAsianet News Tamil

டெஸ்ட்டை விட மோசமா விளையாடி GT தோல்வி – மாஸ் காட்டிய சாஹர், தேஷ்பாண்டே, முஷ்தாபிஜூர்!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 7ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Chennai Super Kings beat Gujarat Titans by 63 runs difference in 7th IPL 2024 Match at MA Chidambaram Stadium rsk
Author
First Published Mar 26, 2024, 11:58 PM IST

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் 7ஆவது போட்டி தற்போது எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது. இதில் ரச்சின் ரவீந்திரா முதலில் அடித்துக் கொடுக்க, அதையே பிடித்து, ஷிவம் துபேயும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதில் அவர் 51 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் மட்டும் 11 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. கடைசியாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர், 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில், சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு தீபக் சாகர் வீசிய பந்து விருத்திமான் சகா ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அடுத்த பந்திலேயே சகா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கர் 12 பந்துகளில் ஒரு சிக்சர் உள்பட 12 ரன்கள் மட்டுமே அடித்து டேரில் மிட்செல் பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த டேவிட் மில்லர் 21 ரன்களில் வெளியேற, அஸ்மதுல்லா உமர்சாய் 11, ராகுல் திவேதியா 6, ரஷீத் கான் 1 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழக வீரர் சாய் சுதர்சன் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். ஆனால், அவர், 31 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. குஜராத் அணியை பொறுத்த வரையில் மொத்தமே 3 சிக்ஸர் மட்டுமே அடித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டை விட மோசமாக விளையாடி இந்தப் போட்டியில் குஜராத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சிஎஸ்கே ஹோம் மைதானத்தில் 2ஆவது வெற்றியை பெற்றுள்ளது. அதோடு, இதுவரையில் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றை மஞ்சள் பாய்ஸ் மாற்றி எழுதியுள்ளனர்.

சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஷ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டேரில் மிட்செல் மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios