IPL 2023: முக்கியமான போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
சிஎஸ்கே - கேகேஆர் இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், மிக மிக சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது இந்த சீசன். குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.
லக்னோ, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் தலா 12 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ளன. ஆர்சிபி 11 போட்டிகளில் 5 வெற்றிகளையும், கேகேஆர் 12 போட்டிகளில் 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எனவே பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு 8 அணிகளுக்கு இன்னும் உள்ளது. சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸை தவிர மற்ற 8 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேற போராடுவதால் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது.
IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்
இன்று பிற்பகல் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் அணிகள் மோதுகின்றன. சிஎஸ்கே அணி இந்த போட்டியில் ஜெயித்தால் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். எனவே சிஎஸ்கே அணிக்கு இது முக்கியமான போட்டி. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா, மதீஷா பதிரனா.
இம்பேக்ட் பிளேயர் - அம்பாதி ராயுடு
உத்தேச கேகேஆர் அணி:
ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா, சுயாஷ் ஷர்மா, வருண் சக்கரவர்த்தி.
இம்பேக்ட் பிளேயர் - அனுகுல் ராய்.