நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் 9ஆவது சீசன் வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது.
சிசிஎல் (CCL - Celebrity Cricket League) எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் 9ஆவது சீசன் வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை ரைனோஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், போஜ்புரி தபாங்ஸ் மற்றும் பஞ்சாப் டி ஷெர் என்று மொத்தமாக 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. ஏராளமான நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் ஒரு கிரிக்கெட் தொடர் தான் சிசிஎல் (CCL). இந்த தொடரில் மொத்தம் 16 போட்டிகள் நடக்கும். அதில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். வரும் 18 ஆம் தேதி தொடங்கும் சிசிஎல்லின் இறுதிப் போட்டி வரும் மார்ச் 19 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.
புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் 4ஆவது இடத்தில் இருக்கும் அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும், 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் இருக்கும் அணிகள் 2ஆவது அரையிறுதிப் போட்டியிலும் மோதும். இந்த இரு அரையிறுதிப் போட்டிகளுமே மார்ச் 18 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகின்றன.
இதற்கு முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த முதல் சிசிஎல் சீசனில் சென்னை ரைனோஸ் அணி வெற்றி பெற்றது. 2012 ஆம் ஆண்டு சீசனில் சென்னை அணி வெற்றி பெற்றது. 2013 ஆம் ஆண்டு கர்நாடகா புல்டோசர்ஸ், 2014 ஆம் ஆண்டு கர்நாடகா புல்டோசர்ஸ், 2015 ஆம் ஆண்டு தெலுங்கு வாரியர்ஸ், 2016 ஆம் ஆண்டு தெலுங்கு வாரியர்ஸ், 2017 ஆம் ஆண்டு தெலுங்கு வாரியர்ஸ், 2019 ஆம் ஆண்டு மும்பை ஹீரோஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக சிசிஎல் சீசன் நடக்கவில்லை. 3 ஆண்டுகளுக்குப் பிறகு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடப்பதால், நட்சத்திரங்கள் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்கின்றனர்.
அணிகளும், கேப்டன்களும்....
சென்னை ரைனோஸ் - ஆர்யா
கேரளா ஸ்டிரைக்கர்ஸ் - குஞ்சாகோ போபன்
கர்நாடகா புல்டோசர்ஸ் - சுதீப்
தெலுங்கு வாரியர்ஸ் - அக்கில் அக்கினேனி
பெங்கால் டைகர்ஸ் - ஜிஸ்ஷூ
மும்பை ஹீரோஸ் - ரித்தேஷ் தேஷ்முக்
போஜ்புரி தாபங்ஸ் - மனோஜ் திவாரி
பஞ்சாப் டி ஷெர் - சோனு சூட்
சிசிஎல் போட்டி அட்டவணை:
பிப்ரவரி 18: பெங்கால் டைகர்ஸ் - கர்நாடகா புல்டோசர்ஸ் - லக்னோ - பிற்பகல் 2.30 - 6.30
சென்னை ரைனோஸ் - மும்பை ஹீரோஸ் - லக்னோ - இரவு 7.00 - 11.00
பிப்ரவரி 19: கேரளா ஸ்டிரைக்கர்ஸ் - தெலுங்கு வாரியர்ஸ் - லக்னோ - பிற்பகல் 2.30 - 6.30
பஞ்சாப் டி ஷெர் - போஜ்புரி தாபங்ஸ் - லக்னோ - இரவு 7.00 - 11.00
பிப்ரவரி 25: சென்னை ரைனோஸ் - போஜ்புரி தாபங்ஸ் - ஜெய்பூர் - பிற்பகல் 2.30 - 6.30
பெங்கால் டைகர்ஸ் - தெலுங்கு வாரியர்ஸ் - ஜெய்பூர் - இரவு 7.00 - 11.00
பிப்ரவரி 26: கேரளா ஸ்டிரைக்கர்ஸ் - கர்நாடகா புல்டோசர்ஸ் - ஜெய்பூர் - பிற்பகல் 2.30 - 6.30
பஞ்சாப் டி ஷெர் - மும்பை ஹீரோஸ் - ஜெய்பூர் - இரவு 7.00 - 11.00
மார்ச் 4: பஞ்சாப் டி ஷெர் - தெலுங்கு வாரியர்ஸ் - பெங்களூர் - பிற்பகல் 2.30 - 6.30
சென்னை ரைனோஸ் - கர்நாடகா புல்டோசர்ஸ் - பெங்களூர் - பிற்பகல் 2.30 - 6.30
மார்ச் 5: பெங்கால் டைகர்ஸ் - போஜ்புரி தாபங்ஸ் - திருவனந்தபுரம் - பிற்பகல் 2.30 - 6.30
கேரளா ஸ்டிரைக்கர்ஸ் - மும்பை ஹீரோஸ் - திருவனந்தபுரம் - இரவு 7.00 - 11.00
மார்ச் 11: கேரளா ஸ்டிரைக்கர்ஸ் - போஜ்புரி தாபங்ஸ் - ஜோத்பூர் - பிற்பகல் 2.30 - 6.30
பஞ்சாப் டி ஷெர் - கர்நாடகா புல்டோசர்ஸ் - ஜோத்பூர் - இரவு 7.00 - 11.00
மார்ச் 12: சென்னை ரைனோஸ் - தெலுங்கு வாரியர்ஸ் - ஜோத்பூர் - பிற்பகல் 2.30 - 6.30
பெங்கால் டைகர்ஸ் - மும்பை ஹீரோஸ் - ஜோத்பூர் - இரவு 7.00 - 11.00
மார்ச் 18: முதல் அரையிறுதிப் போட்டி - ஹைதராபாத் - பிற்பகல் 2.30 - 6.30
2வது அரையிறுதிப் போட்டி - ஹைதராபாத் - இரவு 7.00 - 11.00
மார்ச் 19: இறுதிப் போட்டி - ஹைதராபாத் - இரவு 7.00 - 11.00
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் ஜீ டிவி நெட்வொர்க்கில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
