இலங்கை கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸின் கார், முதியவரின் மீது சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. 

2015ம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான குசால் மெண்டிஸ், இலங்கை அணிக்காக 44 டெஸ்ட், 76 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். வலது கை பேட்ஸ்மேனான குசால் மெண்டிஸ், இலங்கை அணியின் நட்சத்திர வீரராக திகழ்கிறார். 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் வீரர்கள் வீட்டில் முடங்கியிருந்த நிலையில், இலங்கையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முகாம் புதன்கிழமை முடிந்ததால், அதில் கலந்துகொண்டு திரும்பினார் குசால் மெண்டிஸ். 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5-5.30 மணியளவில் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் குசால் மெண்டிஸ் காரில் சென்றபோது, சைக்கிளில் சென்ற 64 வயது முதியவர் மீது அவரது கார் மோதியதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து குசால் மெண்டிஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், குறுகலான ஒருசாலையில் மெண்டிஸின் கார், முதியவரின் சைக்கிள் மீது மோதிய காட்சி பதிவான, சிசிடிவி வீடியோவை டெய்லி மிரர் வெளியிட்டுள்ளது.

குறுகலான சாலையில் குசால் மெண்டிஸின் கார், முதியவரின் சைக்கிள் மீது மோதியது அந்த காட்சியில் இடம்பெற்றுள்ளது.