Asianet News TamilAsianet News Tamil

கேப்டன் கோலியின் மாஸ்டர் ப்ளான் எப்படி ஒர்க் அவுட் ஆகியிருக்குனு பாருங்க.. வீடியோ

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலியின் ஆலோசனையின்படி பந்துவீசி இஷாந்த் சர்மா விக்கெட் எடுத்த வீடியோவை பார்ப்போம். 

captain kohli idea to help ishant sharma to take bavuma wicket
Author
Vizag, First Published Oct 4, 2019, 3:19 PM IST

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே அபாரமாக ஆடினர். ரோஹித் சர்மா 176 ரன்களையும் இரட்டை சதமடித்த மயன்க் அகர்வால் 215 ரன்களையும் குவித்தனர். இவர்கள் இருவரின் அபாரமான பேட்டிங்கால் 502 ரன்களை குவித்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

நேற்றைய ஆட்டத்தில் 20 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவரை சமாளித்து ஆடிமுடிக்க முடியாமல் 3 விக்கெட்டுகளை இழந்தது. மார்க்ரம், டி ப்ருய்ன் மற்றும் டேன் பீட் ஆகிய மூவரும் நேற்று ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் எல்கருடன் பவுமா ஜோடி சேர்ந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பவுமாவின் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் எல்கருடன் இணைந்து டுப்ளெசிஸ் நன்றாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 115 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 55 ரன்களில் ஆட்டமிழக்க, எல்கர் சதமடித்தார். அதன்பின்னர் எல்கருடன் ஜோடி சேர்ந்த டி காக்கும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் டீ பிரேக் வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் அடித்துள்ளது. 

captain kohli idea to help ishant sharma to take bavuma wicket

இன்றைய ஆட்டத்தில் இரண்டு செசனில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இந்திய பவுலர்களால் வீழ்த்த முடிந்தது. அந்தளவிற்கு தென்னாப்பிரிக்க வீரர்கள் நன்றாக ஆடிவருகின்றனர். இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வீழ்த்தப்பட்ட பவுமாவின் விக்கெட், கேப்டன் கோலியின் ஆலோசனையால் வீழ்த்தப்பட்டது. 

captain kohli idea to help ishant sharma to take bavuma wicket

பவுமாவின் விக்கெட் விழுவதற்கு முன்னதாக, இஷாந்த் சர்மாவை அழைத்து ஆலோசனை வழங்கினார் கேப்டன் கோலி. இதையடுத்து, அதுவரை வீசியதை விட சற்று கூடுதலாக பந்து திரும்பும்படி, இன் ஸ்விங் வீசினார் இஷாந்த் சர்மா. அந்த பந்தில் பவுமா சிக்கிவிட்டார். எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அந்த வீடியோவை பிசிசிஐ அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ... 

How Ishant & Virat plotted Bavuma's dismissal

How Ishant & Virat plotted Bavuma's dismissal

Follow Us:
Download App:
  • android
  • ios