பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஜெயிக்கிறது; ரூ.5 கோடி பந்தயம் கட்டிய கனடா ராப்பர் டிரேக்!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 19ஆவது போட்டியில் இந்தியா ஜெயிக்கிறது என்று கனடாவைச் சேர்ந்த ராப்பர் மற்றும் பாடகர் டிரேக் ரூ.5 கோடி பந்தயம் கட்டியுள்ளார்.

Canadian rapper Drake has placed a bet of Rs 5 crore that India will win in 19th Match of T20 World Cup against Pakistan in New York rsk

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தொடரின் 19ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடிக்கும். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் இந்தியா தான் வெற்றி பெறும் என்று கனடா நாட்டைச் சேர்ந்த ராப்பர் மற்றும் பாடகரான டிரேக் ரூ.5 கோடி பந்தயம் கட்டியுள்ளார்.

Canadian rapper Drake has placed a bet of Rs 5 crore that India will win in 19th Match of T20 World Cup against Pakistan in New York rsk

கூடைப்பந்து, ரக்பி, கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பந்தயம் கட்டிய டிரேக் 2ஆவது முறையாக கிரிக்கெட் போட்டிக்கு என்று பந்தயம் கட்டியுள்ளார். இதற்கு முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியின் போது கேகேஆர் வெற்றி பெறும் என்று டிரேக் 2,50,000 டாலர் பந்தயம் கட்டினார்.

இந்தப் போட்டியில் கேகேஆர் வெற்றி பெறவே 4,50,000 டாலர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தான் இன்று நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று 6,50,000 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 5.42 கோடி) பந்தயம் கட்டியுள்ளார். டிரேக் பந்தயம் கட்டியது போன்று இந்தியா வெற்றி பெற்றால் அவர் 9,10,000 டாலர் ஜெயிப்பார். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7.6 கோடி ஆகும்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios