Asianet News TamilAsianet News Tamil

19 பந்தில் அரைசதம் அடித்து இந்தியாவின் பவுலிங்கை பிரித்து மேய்ந்த கேமரூன் க்ரீன்..! ஆஸி.,க்கு அதிரடி தொடக்கம்

இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் 19 பந்தில் அரைசதம் அடித்து ஆஸ்திரேலிய அணிக்கு அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார் கேமரூன் க்ரீன்.
 

cameron green hits 19 balls fifty against india in third t20
Author
First Published Sep 25, 2022, 7:31 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றநிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. 

ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வுசெய்தார். இந்திய அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), கேமரூன் க்ரீன், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு கேமரூன் க்ரீன் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்த கேமரூன் க்ரீன், பும்ரா வீசிய 3வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அக்ஸர் படேலின் பவுலிங்கையும் அடித்து நொறுக்கி 19 பந்தில் அரைசதம் அடித்தார் கேமரூன் க்ரீன்.

மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேமரூன் க்ரீன் 21 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களை விளாசி புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். ஆனால் க்ரீன் அவரது பணியை செவ்வனே செய்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால்  ஆஸ்திரேலிய அணி பவர்ப்ளேயில் 66 ரன்களை குவித்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios