இந்திய கிரிக்கெட் அணியில் எம்.எஸ்.கே.பிரசாத்துக்கு அடுத்து சுனில் ஜோஷி தலைமை தேர்வாளராக இருந்துவந்தன் நிலையில், புதிய தலைமை தேர்வாளர் உட்பட 3 தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான போட்டிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அஜித் அகார்கர், நயன் மோங்கியா, சேத்தன் சர்மா, அபே குருவில்லா, தேபாஷிஷ் மொஹாந்தி உட்பட 11 பேரை வடிகட்டி, அவர்களை நேர்காணல் செய்தது, மதன் லால் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு.

இவர்களில் சேத்தன் சர்மா, அபே குருவில்லா, தேபாஷிஷ் மொஹாந்தி ஆகிய மூவரையும் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமிக்குமாறு பிசிசிஐயிடம் பரிந்துரை செய்துள்ள கிரிக்கெட் ஆலோசனைக்குழு, புதிய தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மாவை நியமிக்குமாறும் பரிந்துரைத்துள்ளது.