விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தும் கூட, அந்த அணியின் தவறான அணுகுமுறையால் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே வரும் சீசனில் முதல் முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் முனைப்பில் ஆர்சிபி உள்ளது. 

இதற்கிடையே, திடீரென ஆர்சிபி அணி, கேப்டன் கோலிக்குக்கூட தெரியாமல், அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து ப்ரொஃபைல் படங்கள், லோகோ, பதிவுகள் ஆகியவற்றை நீக்கியது. இதைக்கண்டு கேப்டன் கோலி உட்பட டிவில்லியர்ஸ், சாஹல் ஆகிய வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் ஆர்சிபி அணி புதிய லோகோவை நேற்று(பிப்ரவரி 14ம் தேதி) வெளியிட்டது. அந்த லோகோவை கண்ட பும்ரா, இந்த லோகோ எனது பவுலிங் ஆக்‌ஷனை போலவே இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

Also Read - இங்கிலாந்துக்கு எதிராக கண்மூடித்தனமா அடித்த டி காக்.. டிவில்லியர்ஸின் சாதனையை தகர்த்து தரமான சம்பவம்

பும்ரா இதை சொல்லும்வரையில் யாருக்கும் அப்படி தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் சொன்னபிறகு, அந்த கோணத்தில் ஆர்சிபியின் லோகோவை பார்த்தோமேயானால், அவர் சொன்னதில் இருந்த நியாயத்தை புரிந்துகொள்ள முடிகிறது.