Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பையை அந்த அணி வெல்லாது.. இந்த அணிதான் வெல்லும்!! லெஜண்ட் பிரயன் லாரா அதிரடி

உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என லெஜண்ட் பிரயன் லாரா கருத்து தெரிவித்துள்ளார். 

brian lara predicts indian team has more chance to win world cup 2019
Author
England, First Published Jun 2, 2019, 5:00 PM IST

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவாக திகழ்கிறது. உலகம் முழுதும் வெற்றிகளை குவித்து தரமான மற்றும் வலுவான அணியாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாதவகையில், மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது கூடுதல் பலம். 

ஆஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் வார்னரின் வருகைக்கு பிறகு உத்வேகமடைந்துள்ளது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நல்ல கலவையிலான வீரர்களை பெற்றுள்ள நியூசிலாந்து அணி, பவுலிங்கில் அசத்திவருகிறது. இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. 

brian lara predicts indian team has more chance to win world cup 2019

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் நன்றாக உள்ளன. அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி எப்போது எப்படி ஆடும் என்பதை கணிக்கவே முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவித்த வெஸ்ட் இண்டீஸ், நேற்று முன் தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 105 ரன்களுக்கு சுருட்டி வெற்றி கண்டது.

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், உலக கோப்பையை எந்த அணி வெல்லும், அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து பேசிய பிரயன் லாரா, இங்கிலாந்தை விட இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்குத்தான் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். 

brian lara predicts indian team has more chance to win world cup 2019

இதுகுறித்து பேசிய லாரா, இங்கிலாந்து அணி சிறந்த அணியாகத்தான் உள்ளது. இந்த உலக கோப்பையில் இங்கிலாந்து அணி கடும் சவாலான அணியாக திகழும். அரையிறுதியில் கண்டிப்பாக ஆடும். ஆனால் இறுதி போட்டி போன்ற முக்கியமான போட்டிகளில் இங்கிலாந்து அணி சரியாக ஆடியதே இல்லை. எனவே கோப்பையை வெல்லும் என்று உறுதியாக கூற முடியாது. ஆனால் அதேநேரத்தில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புள்ளது என்று லாரா தெரிவித்துள்ளார். இந்திய அணியில் நல்ல பவுலிங் வேரியேஷன் உள்ளது என்றும் லாரா தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios