இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான பழமையான மற்றும் பாரம்பரியமான ஆஷஸ் தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. 

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இந்நிலையில், இந்த ஆஷஸ் தொடரின் முடிவு, அதிக ரன்கள் அடிக்கப்போவது யார், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தப்போவது யார் ஆகிய கணிப்புகளை தெரிவித்துள்ளார் பிரயன் லாரா. 

இதுகுறித்து டுவீட் செய்துள்ள லாரா, இங்கிலாந்து அணி தான் ஆஷஸ் தொடரை வெல்லும் என ஆருடம் தெரிவித்துள்ளார். ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அதிகமான ரன்களை குவிப்பார் எனவும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக வோக்ஸ் திகழ்வார் என்றும் லாரா கணித்துள்ளார். 

லாரா சும்மா குத்துமதிப்பாக இல்லாமல், நடப்பு ஃபார்மின் அடிப்படையில் லாரா கணித்துள்ளார்.