Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பை 2019: அந்த அணி மட்டும் அரையிறுதிக்கு வந்துச்சுனா மத்த டீமுக்குலாம் தொடை நடுங்கிடும்.. லெஜண்ட் லாரா அதிரடி

உலக கோப்பையில் அரையிறுதிக்கு அந்த அணி மட்டும் முன்னேறிவிட்டால், மற்ற அணிகள் எல்லாம் பீதியடைந்துவிடும் என்று பிரயன் லாரா ஒரு அணியை தெரிவித்துள்ளார்.

brian lara picks west indies as dark horse in world cup 2019
Author
England, First Published Jun 3, 2019, 1:25 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவாக திகழ்கிறது. உலகம் முழுதும் வெற்றிகளை குவித்து தரமான மற்றும் வலுவான அணியாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாதவகையில், மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது கூடுதல் பலம். 

brian lara picks west indies as dark horse in world cup 2019

ஆஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் வார்னரின் வருகைக்கு பிறகு உத்வேகமடைந்துள்ளது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நல்ல கலவையிலான வீரர்களை பெற்றுள்ள நியூசிலாந்து அணி, பவுலிங்கில் அசத்திவருகிறது. இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் நன்றாக உள்ளன. அதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி எப்போது எப்படி ஆடும் என்பதை கணிக்கவே முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் 400 ரன்களுக்கு மேல் குவித்த வெஸ்ட் இண்டீஸ், நேற்று முன் தினம் நடந்த போட்டியில் பாகிஸ்தானை 105 ரன்களுக்கு சுருட்டி வெற்றி கண்டது.

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், உலக கோப்பை குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், உலக கோப்பை குறித்து பேசிய லாரா, இந்த உலக கோப்பையை இங்கிலாந்தைவிட இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புதான் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். 

brian lara picks west indies as dark horse in world cup 2019

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்து பேசிய லாரா, வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான திறமைகளை கொண்ட சிறந்த அணிதான். நான் உட்பட பெரும்பாலானோர் டாப் 4 அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் இருக்கும் என கூறவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை கணிக்க முடியாது. வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு முன்னேறும்பட்சத்தில், அனைத்து அணிகளும் கண்டிப்பாக பீதியடையும். எதிர்த்து ஆடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் எளிதான அணி அல்ல என்று லாரா தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios