Asianet News TamilAsianet News Tamil

என் கெரியரில் நான் பந்துவீசியதிலேயே மிகச்சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் இவங்கதான்! பிரெட் லீ-யின் நேர்மையான தேர்வு

தனது கெரியரில் தான் பந்துவீசியதிலேயே எந்த 3 பேட்ஸ்மேன்கள் மிகச்சிறந்தவர்கள் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார். 
 

brett lee picks 3 toughest batsmen he has ever bowled to in his career
Author
Australia, First Published May 28, 2020, 2:33 PM IST

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான பிரெட் லீ, ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர். ஆஸ்திரேலிய அணிக்காக 1999ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆடிய பிரெட் லீ, 76 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 310 விக்கெட்டுகளையும் 221 ஒருநாள் போட்டிகளில் ஆடி 380 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

2003, 2007ம் ஆண்டுகளில் பாண்டிங்  தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பையை வென்றபோது, அந்த இரண்டு உலக கோப்பைகளிலுமே பிரெட் லீ முக்கிய பங்கு வகித்தார். தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின், லாரா, ராகுல் டிராவிட், ஜெயசூரியா, சங்கக்கரா, ஜெயவர்தனே, விவிஎஸ் லட்சுமணன் ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கால் மிரட்டியவர் பிரெட் லீ. 

brett lee picks 3 toughest batsmen he has ever bowled to in his career

இப்படி பல பேட்ஸ்மேன்களை அவர் மிரட்டியிருந்தாலும், தான் பந்துவீசியதிலேயே யார் மிக கடினமான பேட்ஸ்மேன்கள் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் பொம்மி மபாங்வாவுடனான இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில், பொம்மியின் அந்த கேள்விக்கு பிரெட் லீ பதிலளித்தார். 

“முதல் ஆள் சச்சின் டெண்டுல்கர் தான். ஏன் சச்சின் டெண்டுல்கர் என்றால், ஃபாஸ்ட் பவுலிங்கை ஆடுவதற்கான போதிய நேரத்தை அவர் பெற்றிருப்பார். அது மிகவும் வியப்பாக இருக்கும். அவர் ஃபாஸ்ட் பவுலிங்கை ஆடுவதை பார்த்தால், பேட்டிங் கிரீஸில் ஸ்டம்புக்கு பின்னால் நின்று ஆடுவதை போன்று இருக்கும். அவ்வளவு அசால்ட்டாக ஆடுவார். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தான்.

brett lee picks 3 toughest batsmen he has ever bowled to in his career

அடுத்தது பிரயன் லாரா. 6 பந்தையும் ஒரே இடத்தில் வீசினாலும், அந்த 6 பந்தையும் 6 திசைகளில் அடிக்கக்கூடிய அருமையான பேட்ஸ்மேன் பிரயன் லாரா.

brett lee picks 3 toughest batsmen he has ever bowled to in his career

மூன்றாவது தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ். உலகின் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன் சச்சின் என்றால், என்னை பொறுத்தமட்டில், உலகின் முழுமையான கிரிக்கெட்டர் ஜாக் காலிஸ். கேரி சோபர்ஸ் ஆடியதை நான் நேரில் பார்த்ததில்லை. டிவியில் ஹைலைட்ஸ் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்தவரையில், மிகச்சிறந்த முழுமையான கிரிக்கெட்டர் ஜாக் காலிஸ் தான் என்று பிரெட் லீ தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios