Asianet News TamilAsianet News Tamil

IPL டேவிட் வார்னர் ஐபிஎல்லில் அடுத்த சீசனிலிருந்து ஆடப்போகும் அணி இதுதான்..!

டேவிட் வார்னர் அடுத்த ஐபிஎல் சீசனிலிருந்து எந்த அணியில் ஆடுவார் என்று பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

brad hogg predicts rcb will sign david warner as a new captain from ipl 2022
Author
Chennai, First Published Nov 15, 2021, 5:30 PM IST

ஐபிஎல்லில் 2014ம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர், 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு தனது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் மூலம் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் வார்னர்.

ஆனால் வார்னர் அணிக்கு அளித்த பங்களிப்பை எல்லாம் மறந்து, அவர் ஃபார்மில் இல்லாத காரணத்தால் ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாதியில் ஒன்றிரண்டு போட்டிகளுக்கு பின்னர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் வார்னர். கேப்டன்சி கேன் வில்லியம்சனிடம் ஒப்படைக்கப்பட்டு, வார்னருக்கு ஆடும் லெவனில் கூட இடம் வழங்கப்படவில்லை. வார்னர் மாதிரியான ஒரு கிரேட் பிளேயரை ஃபார்மை காரணம் காட்டி ஓரங்கட்டியது ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களுக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

வார்னரின் மோசமான ஃபார்ம் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ என அந்த அணி கவலைப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பையில் 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் மற்றும் 48.16 என்ற சராசரியுடன் 289 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார் வார்னர். 

அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 49 ரன்கள், இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 53 ரன்கள் என குவித்த வார்னர், ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

தன்னை ஓரங்கட்டிய சன்ரைசர்ஸ் அணியிலிருந்து வார்னர் வெளிவந்துவிட்ட நிலையில், அடுத்த  ஐபிஎல் சீசனில் புதிதாக 2 அணிகள் (அகமதாபாத், லக்னோ) சேர்ந்திருப்பதால், வார்னரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பிராட் ஹாக், ஆர்சிபி அணி வார்னரை எடுத்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஏனெனில் பெங்களூரு ஆடுகளம் வார்னருக்கு ஏற்றாற்போல் இருக்கும். அதுமட்டுமல்லாது கோலி கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டதால் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டன் தேவை. எனவே அந்தவகையில், வார்னரை ஆர்சிபி அணி எடுக்க வாய்ப்புள்ளது என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் வேட்கையுடன் ஒவ்வொரு சீசனையும் எதிர்கொள்ளும் ஆர்சிபி அணிக்கு, பிராட் ஹாக் சொல்வது போல ஒருவேளை வார்னர் அந்த அணியில் ஆடினார் என்றால், ஆர்சிபி அணிக்கு கோப்பை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது நடந்தால் வார்னர், கோலி, டிவில்லியர்ஸ் என மிகப்பெரிய அதிரடி படையை பெறும் ஆர்சிபி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios