டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார். 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் காலக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

குறிப்பாக, இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை என்ற விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்லும் பெரும் வேட்கையில் உள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை ஆஸி., முன்னாள் வீரர் பிராட் ஹாக் தேர்வு செய்துள்ளார். அதன்படி, ரோஹித் சர்மாவுடன் விராட் கோலியே தொடக்க வீரராக இறங்கலாம் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 4ம் வரிசையில் கேஎல் ராகுல், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ள பிராட் ஹாக், ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின் ஆல்ரவுண்டராக ஜடேஜாவை தேர்வு செய்த பிராட் ஹாக், மற்றொரு ஸ்பின்னராக யுஸ்வேந்திர சாஹலை தேர்வு செய்துள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான பிராட் ஹாக் தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா, விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.