இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் இந்திய வீரர்கள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் ஆடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக, இந்திய வீரர்கள் மும்பையில் குவாரண்டினில் உள்ளனர். வரும் ஜூன் 2(புதன்கிழமை) இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கின்றனர். 

மும்பையில் தங்கியுள்ள இந்திய வீரர்கள், இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன், ஃபிட்னெஸை உறுதி செய்ய ஜிம்மில் தீவிர ஒர்க் அவுட் செய்கின்றனர். அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

ஃபிட்னெஸில் இந்திய அணி அதிக கவனம் செலுத்திவரும் நிலையில் வீரர்கள் முழு ஃபிட்னெஸுடன் உள்ளனர். விராட் கோலி, ரிஷப் பண்ட், புஜாரா, ஜடேஜா, மயன்க் அகர்வால், பும்ரா ஆகியோர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

Scroll to load tweet…