ஸ்லோ மோஷன் வீடியோ, கெத்தா, கம்பீரமாக நடந்து வந்த இந்திய வீரர்கள்: லேண்டான உடனே நியூ இயர் வாழ்த்து சொன்ன சிராஜ்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், கேப்டவுன் வந்த இந்திய வீரர்களில் முகமது சிராஜ் அனைவருக்கும் நியூ இயர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 3ஆம் தேதி கேப்டவுனில் நடக்க இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலமாக தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றாத நிலையில் இந்த முறை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. எனினும், தொடரை சமன் செய்ய 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், கேப்டவுனில் இதுவரையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. இதனால், இந்தப் போட்டியில் எப்படியும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது பேட்டிங்கும், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது மோசமான பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் தான் 2023 ஆம் ஆண்டு முடிந்து 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று இந்திய வீரர்கள் கேப் டவுனிற்கு விமானம் மூலமாக வந்திறங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவில் வீரர்கள் ஒவ்வொருவரும் ஸ்லோ மோஷனில் நடந்து வருகின்றனர். மேலும் கேப்டவுனில் லேண்டான உடனே அனைவருக்கும் ஹேப்பி நியூ இயர். எஞ்சாய் 2024 என்று முகமது சிராஜ் கூறுகிறார்.
மகனுடன் நியூ இயர் கொண்டாடிய கிளென் மேக்ஸ்வெல் – வைரலாகும் வீடியோ!
ஏற்கனவே ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைரா ஆகியோர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே போன்று விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் 2 நாட்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றார்.
📍Cape Town#TeamIndia have arrived for the second #SAvIND Test 👌🏻👌🏻 pic.twitter.com/VGCTdk7yzO
— BCCI (@BCCI) January 1, 2024