கொரோனா 2ம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலாக திகழும் நிலையில், கொரோனா நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றி ஐபிஎல்லை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்திவருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், எந்தெந்த நகரங்களில் நடத்தலாம் என்பது குறித்து முன்கூட்டியே ஐசிசிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அதற்காக பிசிசிஐ உயர்மட்ட குழு கலந்தாலோசித்து 9 நகரங்களின் பட்டியலை ஐசிசிக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, தர்மசாலா ஆகிய 9 நகரங்களின் நடத்தலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது பிசிசிஐ அனுப்பியிருக்கும் பட்டியல். இந்த நகரங்களில் போட்டிகளை நடத்த பிசிசிஐ செய்திருக்கும் ஏற்பாடுகளை பார்த்துவிட்டு இறுதி முடிவை ஐசிசி எடுக்கும்.