ஐபிஎல் 15வது சீசனின் பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி ஆகிய போட்டிகள் எங்கு, எப்போது நடக்கும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மார்ச் 26ம் தேதி தொடங்கிய லீக் போட்டிகள் மே 22ம் தேதியுடன் முடிவடைகிறது. கொரோனா பாதுகாப்பு கருதி ஐபிஎல் லீக் போட்டிகள் முழுவதுமாக பயோ பபுள் வசதிக்காக மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டுமே நடக்கின்றன.
பிளே ஆஃப் மற்றும் ஃபைனல் போட்டிகள் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரங்களில் நடக்கவுள்ளன. மே 22ம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடையும் நிலையில், பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி ஆகிய போட்டிகள் எங்கு, எப்போது நடக்கும் என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மே 24ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டி மற்றும் மே 25ம் தேதி எலிமினேட்டர் போட்டி ஆகிய 2 போட்டிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கின்றன. மே 27ம் தேதி 2 தகுதிச்சுற்று போட்டியும், மே 29ம் தேதி இறுதிப்போட்டியும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும் நடக்கின்றன.
