Asianet News TamilAsianet News Tamil

விஜய் ஹசாரே தொடருக்கான பரோடா அணி அறிவிப்பு.. க்ருணல் பாண்டியா கேப்டன்

விஜய் ஹசாரே தொடருக்கான 22 வீரர்கள் கொண்ட பரோடா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

baroda squad announced for vijay hazare trophy
Author
Baroda, First Published Feb 11, 2021, 5:03 PM IST

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் அண்மையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் நடக்கவுள்ளது.

வரும் 20ம் தேதி முதல் மார்ச் 14ம் தேதி வரை விஜய் ஹசாரே தொடர் நடக்கவுள்ளது. இந்த தொடருக்கான 22 வீரர்களை கொண்ட பரோடா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  சையத் முஷ்டாக் அலி தொடரில், பரோடா கேப்டன் க்ருணல் பாண்டியா, அவரது தந்தை இறந்துவிட்டதால் முழு தொடரிலும் ஆடவில்லை. 

ஆனாலும் பரோடா அணி மிகச்சிறப்பாக ஆடி ஃபைனல் வரை முன்னேறியது. ஃபைனலில் தமிழ்நாட்டிடம் அடி வாங்கி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், விஜய் ஹசாரே தொடருக்கான, க்ருணல் பாண்டியா தலைமையிலான விஜய் ஹசாரே தொடருக்கான 22 வீரர்களை கொண்ட பரோடா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஹசாரே தொடரில் குஜராத், சத்தீஸ்கர், ஹைதராபாத், திரிபுரா, கோவா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள எலைட் ஏ க்ரூப்பில் பரோடா அணியும் உள்ளது. 

விஜய் ஹசாரே தொடருக்கான பரோடா அணி:

க்ருணல் பாண்டியா(கேப்டன்), கேதர் தேவ்தர்(துணை கேப்டன்), பிரத்யூஷ்குமார், விஷ்ணு சோலங்கி, அபிமன்யூ சிங் ராஜ்பூத், ஸ்மித் படேல்(விக்கெட் கீப்பர்), நினாத் ராத்வா, அடிட் ஷேத், கார்த்திக் ககடே, லூக்மேன் மேரிவாலா, பாபாசாஃபி பதான், த்ருவ் படேல், பார்கவ் பட், பானு பனியா, சிண்டால் காந்தி, பார்த் கோலி, ஜோத்சினில் சிங், மிதேஷ் படேல், சோயிப் சொபாரியா, ஷிவாலிக் ஷர்மா, பிரதீப் யாதவ், பிரதீக் கோதேத்ரா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios