உலக கோப்பை தொடரில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. 3 மணிக்கு நடக்கும் போட்டியில் இங்கிலாந்தும் வங்கதேசமும் மோதுகின்றன. மாலை 6 மணிக்கு நடக்கும் போட்டியில் நியூசிலாந்தும் ஆஃப்கானிஸ்தானும் மோதுகின்றன. 

இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி கார்டிஃபில் நடக்கிறது. இரு அணிகளுமே தலா இரண்டு போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இந்த உலக கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்படும் இங்கிலாந்து அணி, முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருந்தாலும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது. 

அதேபோல தென்னாப்பிரிக்க அணியை முதல் போட்டியில் வீழ்த்திய வங்கதேச அணி, அடுத்த போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. எனவே இரு அணிகளுமே இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பில் இந்த போட்டியில் ஆடுகின்றன. 

இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மோர்டஸா, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் ஆட பணித்தார். இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆடும் லெவனில் மொயின் அலி நீக்கப்பட்டு பிளங்கெட் சேர்க்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ரூட், மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், பிளங்கெட், மார்க் உட். 

வங்கதேச அணி:

தமீம் இக்பால், சௌமியா சர்க்கார், ஷாகிப் அல் ஹாசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), மிதுன், மஹ்மதுல்லா, மொசாடெக் ஹுசைன், சைஃபுதீன், மஷ்ரஃபே மோர்டஸா(கேப்டன்), மெஹிடி ஹாசன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.